Friday, November 21, 2014

ஐ .எஸ் இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?(சில கேள்விகள் )

                                                            ஒரு காலம் இருந்தது ,அது முஸ்லீம்களிடமும் முஸ்லீம் உலகத்திடமும் முஸ்லீம் அல்லாதோரும் பாதுகாப்பையும் புகழிடத்தையும்,வேண்டக்கூடியதாக இருந்தது .அது இஸ்லாத்தின் தனிப்பெரும் அரசியலான கிலாபா சாம்ராஜியத்தோடு முஸ்லீம்கள் ஒன்றி இருந்த நேரமாகும் .அப்போது இஸ்லாத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரங்களும் ,அதிகாரிகளும் இருந்தார்கள் .ஆனால் முஸ்லீம் உம்மத் அவமானத்தோடு தலைகுனிய வேண்டிய நிரந்தர நிலை ஏற்படவில்லை.

          ஆனால் இன்று இராணுவ வலிமையோடும் ,வளங்களோடும் பல முஸ்லீம் பெருநிலங்கள் இருந்தும் அத்தகு நிலங்களில் வாழ்பவர்கள் உட்பட முழு முஸ்லீம்களும் அவமானத்தையும் ,கொடுமைகளையும் சுமந்தவர்களாகவே இருக்கிறார்கள் .அதற்கான காரணம் என்ன ?

      1924 ஆம் ஆண்டு உதுமானிய கிலாபத் வீழ்த்தப் பட்டதன் பின்னரே காலனித்துவ வாதிகள் இந்த உம்மத்தை அரேபிய தேசியங்களாக ,மன்னரிச குறு நிலங்களாக பிரித்தனர் .எல்லைப்படுத்தப் பட்ட இந்த சதி அரசியலின் விளைவு விதியே இன்றைய அவமானங்களுக்கும் ,கொடுமைகளுக்குமான அடிப்படை காரணமாகும் .இந்த இழிவான நிலையை விட்டு மீள மீண்டும் கிலாபா அரசியலின் கீழ் ஒன்றிணைவதே காலத்தின் கட்டாயமாகும் .இதுதானே உண்மை !

         இதைத்தானே ஐ .எஸ் சொல்கிறது !(மேலும் அநேகமான எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் இதைத்தானே சொல்கிறது !) சிக்கலே இந்த இடத்தில இருந்துதான் தொடங்குகிறது .அவசியத்தை காரணம் காட்டுவதன் ஊடாக ஒரு இபாதத்தை இஷ்டப்படி ஒரு முஸ்லிமால் செய்ய முடியுமா !? அப்படி முடியுமானால் சுன்னா என்பதை புறக்கணித்து விட்டு தன்னிச்சையாக ஒரு ஆதிக்க அரசியல் செயல் கட்டமைப்பை ஒரு முஸ்லிமால் செய்ய முடியும் என்று ஆகிவிடும் அல்லவா !?கிலாபாவின் மீள் கட்டமைப்பு இபாதத் ஆக இருக்கும் பட்சத்தில் அதற்கான சுன்னா என்ன !? என்பது மிக அவதானமாக தேடப்பட வேண்டும் .

          இந்த இடத்தில ஐ .எஸ் சுன்னாவை எவ்வளவு தூரம் அலசியுள்ளது !? அதன் வழி நகர்ந்துள்ளது !? அப்படி இல்லாத நிலையில் அபூபக்கர் அல் பக்தாதியின் சரீயா பிரயோக நிலத்துக்கும் ,கிங் அப்துல்லாவின் சரீயா பிரயோக நிலத்துக்கும் இடையில் ஒரு மறைமுக ஒற்றுமை இருப்பதை மறுக்க முடியாமல் உள்ளது என சிலர் கூறுவது ஒரு நெருடக்கூடிய உண்மையாக இருக்கிறது .
                                                                                                                    (தொடரும் ...)

No comments:

Post a Comment