Friday, November 7, 2014

இஸ்லாமிக் எமிரேட்ஸ் மாயை மேல் எழுப்பப் படும் எதிரியின் சமரசம் !

               
  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட ) மார்க்கம் 
இஸ்லாமாகும் ....(ஆள இம்ரான் :வசனம் 18)

 ( அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) அரசியல் நகர்வு தொடர்பில்  வெற்று ஆன்மீகப் பதிவோடு பார்க்கும் மதவாதமே தெரிகிறது .மதீனா யுகம் என்ற சித்தாந்த எழுச்சியின் மைல் கல்லாக அந்த ஹிஜ்ரா பார்க்கப்படுவதில்லை .அதனால்  ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் கட்டளை மற்றும் செயல் கிரமம் மறைந்து போகின்றது .

     இங்கு நான் பதிவிட வருவது இகாமதுத் தீன் என்பதன் சுன்னா எது என்ற கோட்பாட்டு பார்வை பற்றியதே .அதிகாரம் மற்றும் இஸ்லாமிய சரீயாவின் பிரயோகம் தொடர்பில் ஒரு பக்குவமான பிரிகோட்டை போட்டது காலனித்துவ வாதிகளின் சதியே .அந்த வகையில் சிலுவை சித்தாந்திகளை அரவணைக்கும் மன்னரிசம் முதல் நவ காலனித்துவத்துக்கு சலாம் போடும் இஸ்லாமிய ஜனநாயகம்,மற்றும் முரண்பாட்டு இராணுவ அரசியலை காட்டி நிற்கும் இஸ்லாமிக் ஸ்டேட் ,எமிரேட்ஸ் போன்ற தேடல்களின் உண்மை நிலையை உணர்த்த இந்தப்பதிவு உதவலாம் .)
         
                               இஸ்லாத்தின் அரசியல் பார்வை மற்றும் அதன்கீழ் வாழ்வு தொடர்பில் முஸ்லீம் உம்மத்திடம் பூரண தெளிவற்ற நிலையே இன்று காணப் படுகிறது .இந்தப்பலவீனம் இஸ்லாம் அல்லாத விடயங்களை தனதாக்கி சிந்திக்கும் ஆபத்தான அரசியலை நோக்கி இன்று நகர்த்தியுள்ளது .அந்தவகையில் இஸ்லாமிய ஜனநாயகம் போலவே இஸ்லாமிக் எமிரேட் எனும் ஒரு எல்லைப்படுத்தப்பட்ட ஒரு அரசியலை முஸ்லீம் பெரு நிலங்களில் சில இஸ்லாமிய இயக்கங்கள் முன்வைக்கின்றன .குறிப்பாக குப்ரிய இராணுவ காலனித்துவ,நவ காலனித்துவ சவால்களுக்கு எதிராக தற்காப்பு போர் தொடுத்த ஆயுதப் போராட்ட இயக்கங்களால் இன்று முன்வைக்கப் படுகிறது .


          தாகூத்தியதுக்கு எதிரான பலமான ஒரு கருத்தியலாக பேசப்படும் இவ்விடயம் மின்னலில் இருந்து தப்பிக்க இரும்புக் கூண்டை தேடிச் செல்லும் பாணியை ஒத்தது .குறித்த விடயம் சொல்லும் அரசியல் சுருக்கம் இதுதான் அடித்துப் பிடித்த பகுதிகளில் ஒரு அமீரை ஏற்படுத்தி விட்டு அங்கு இஸ்லாமிய சரீயாவை பிரயோகித்தல் என்ற குறுநில ஆதிக்க கோட்பாட்டை கொண்டதாகும் .இங்குள்ள பிரதான சந்தேகம்  குறித்த இந்த விடயம் இகாமதுத் தீன் தொடர்பில் சுன்னாவை எவ்வளவு தூரம் ஆழ்ந்து நோக்கியுள்ளது !? எனும் கேள்வியை நோக்கியே எழுகின்றது .

          இன்னும் குப்ர் கூறும் தேசம் ,தேசியம் எனும் பல தலைமைகளை ஒருங்கிணைக்கும் கருத்தியல் கூட்டு இந்த அரசியலில் பிரதானம் ஆகிறது .இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் .அதாவது புதிய போத்தலில் பழைய வைன் என்பது போல இஸ்லாமிக் எமிரேட்ஸ் ,மற்றும் இஸ்லாமிய குடியரசு போன்ற வார்த்தையாடல்கள் ஊடாக குப்ரின் சமரசத்தை நோக்கி பக்குவமாக முஸ்லீம் உம்மத் வழி நடாத்தப் படுகிறது .

          உதுமானிய கிலாபத்தில் இருந்து இஸ்லாமிய சரீயாவோடு சவூதி பிரிக்கப்பட்டது போலவே ,முதல் நிலையில் அமீரிய கோட்பாட்டோடு பல எமிறேட்சுகள்! பிறகு இரண்டாம் நிலையில்  ஒரு பொதுத் தலைமை பற்றி முடிவெடுப்போம் என்ற லாஜிக் முன்வைப்போடு இந்த அரசியல் பேசப்படுகிறது .

             ஆனால் முதல் நிலையிலேயே எல்லைப்படுத்தப்பட்ட பிரிவினை என்பது குப்ரின் விருப்பின் கீழ் இஸ்லாமிய இருப்பு எனும் தேசியத்தை காப்பி அடித்த பலவீனம் புலப்படுகிறது .அது தவிர்க்க முடியாத என்ற சூழ்நிலை வாதத்தை அனுசரித்த போது சமரசமாகவும் மாறி விடுகிறது . இன்னும் குறைநிலையில்  இஸ்லாமிய சரீயவின் பிரயோகம் ,இஸ்லாம் (இஸ்லாம் அனைத்தையும் மிகைக்கும் ) கோட்பாடு எனும் விரிந்த பதத்தையும் உம்மத்திடம் இருந்து மறைத்து விடுகிறது .

           பின்வரும் சம்பவத்தை சற்று ஆழமாக அவதானியுங்கள் .பலவீனமான நிலையில் கூட இஸ்லாமிய இலட்சியத்தின் அழுத்தமான கருத்துக்கள் குரைசிக் காபீர்களை அதிர வைக்கிறது .இஸ்லாமிய பிரச்சாரத்தின் உச்ச எல்லை எவ்வித அழுத்தமும் அற்ற ஒரு அதிகார அரசியல் பற்றியே எதிர்பார்க்கிறது என்பதை அபூஜஹல் உட்பட முழுக் குரைசிக் குப்பார்களுமே உணர்ந்து விடுகின்றனர் .

                                                       எனவே பல கடுமையான எதிர்ப்புகளுக்கு பின்னர் ஒரு வித்தியாசமான சமரசத்தை முன்வைப்பது என தமக்குள் ஆலோசித்தார்கள் .அந்த முடிவு மக்காவின் அதிகாரத்தை முஹம்மதிடம் (ஸல் ) கொடுப்பது ,அதற்கு பகரமாக இஸ்லாமிய பிரச்சாரத்தை விட்டுவிட கோருவது எனும் சமரசமே அதுவாகும் .அபூதாலிப் இடைத்தரகர் ஆகிறார் .

             விடயம் அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) காதுகளுக்கு போடபடுகிறது .அதாவது இஸ்லாத்தை கைவிட எதிரிகள் கோரவில்லை மாறாக வரகா இப்னு நவ்பல் போல மக்காவில் முஸ்லீம்கள் இருந்து விட்டுப் போவதிலும் அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை . அவர்களுக்கு இருந்த ஒரே பிரச்சினை இஸ்லாம் இகாமத் செய்யக்கூடாது எனும் ஆதங்கமே ! அதற்காக முஹம்மதை (ஸல் ) தலைவராக்கவும் குப்ர் தயங்கவில்லை. (குப்ர் நேற்று செய்ய நினைத்ததும் இதுதான் இன்று செய்து கொண்டிருப்பதும் இதுதான் !)

                 வாய்ப்பு எனும் பெயரில் வைக்கப்படும் பொறியை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உணர்ந்தார் ."இதைவிட சிறந்த ஒரு வார்த்தையை  உங்களுக்கு சொல்லட்டுமா !? அது அரபி ,அரபி அல்லாத எல்லோரையும் கட்டுப்பட வைக்கக் கூடியது !" எனக்கூறியபோது அபூஜஹல் அதைப்போல ஆயிரம் வார்த்தைகளையும் அதற்காக சொல்லத் தயார் ! என்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) "அது லா இலாஹ இல்லல்லாஹ் ......." என கூறி "எனது ஒரு கையில் சந்திரனையும் மறுகையில் சூரியனையும் வைத்தாலும் இப்பணியை விடப் போவதில்லை!" என கூறினார்கள் . தோல்வியோடு குறைசிக் குப்பார்கள் சென்று விடுகிறார்கள் .

           இந்த வரலாற்று உண்மை எதிரி தனது சித்தாந்தத்தையும் ,அதன் வாழ்வியலையும் பாதுகாக்க எத்தகு விட்டுக்கொடுப்புகளோடு வருவான் என்பதற்கு ஆதாரமாகிறது .அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) சூழ்நிலையை காரணம் காட்டியோ ,சந்தர்ப்பத்தை காரணம் காட்டியோ இஸ்லாம் எதிர்பார்க்கும் நிலை அல்லாத ஒரு இடைக்கால அதிகார அரசியல் பற்றி சிந்திக்கவே இல்லை என்பதை காட்டி நிற்கிறது .(அது இஸ்லாமிய ஜனநாயகமாக இருக்கலாம் ,இஸ்லாமிக் எமிரேட் சிஸ்டமாக இருக்கலாம் .)

              அதாவது கோட் சூட்டோடு நவ இஸ்லாமியம் பேசுபவர்களாக இருக்கட்டும் ,வெபன் தூக்கி இஸ்லாமிக் எமிரேட் பற்றி கனவு காணும் போராளிகளாக இருக்கட்டும் .தாகூத்தின் நிர்ணய எல்லைக்குள் இருந்து அரசியல் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள் .அதன் ஒரு வடிவமே இந்த இஸ்லாமிக் எமிரேட் என்ற அரசியலாகும்.

No comments:

Post a Comment