Friday, October 17, 2014

சூடு பறக்கும் குப்ரிய எதிர்ப்பும் சுரணை கெட்ட முஸ்லீம் உட்கட்சி மோதலும் .....!!!

         இலங்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் விசாரணை நோக்கில் சிங்கள ,ஆங்கில அல் குர் ஆன் மொழி பெயர்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளது .அதற்கான சந்தேகங்களும் ஊகங்களும் ஒருபுறம் இருக்க போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்திருக்கும் விளக்கம் விடயத்தின் திசையை இன்னொரு கோணத்தில் சிந்திக்க தூண்டியுள்ளது .

           அவர் கூறிய காரணம் இதுதான் "குர் ஆனில் இல்லாத விடயங்களை ஜம்மியத்துல் உலமா சபை செயற்படுத்தி வருவதாக 'தௌஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டை முன்வைக்கிறது .அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிசாரின் தேவைக்காகவே அவை வேண்டப் பட்டன " எனக் கூறுகிறார் .

              இதற்கு பதில் அளித்த சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் ரபீக் தீன் "ஜம்மியத்துல் உலமா சபைக்கும் எமக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன .இதனை நாம் ஏற்கனவே கூறி இருக்கிறோம் .ஆனால் எமது இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை போலீஸிலோ அல்லது வேறு எங்குமோ உலமா சபைக்கு எதிராக முறைப்பாடு எதனையும் செய்ய வில்லை .உலமா சபையே எமக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளது ."எனக் கூறுகிறார் .

         எது எப்படியோ தாகூத்தை சத்திய விடயத்தில் நீதிபதியாக்கும் அசிங்க அரசியலில் இந்த இரு தரப்பும் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது !
 இதில் யார் குற்றவாளி ,யார் சுற்றவாளி என்ற நிலையை விட இரண்டு பட்டுவிட்டு கூத்தாடிகளுக்கு மேடை அமைத்து உம்மத்தை விற்கும் தரம் கெட்ட பார்வை தெரிகிறது .

           போலீஸ் தரப்பு 'சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்திடம் பக்குவமாக விசாரணை என்ற பெயரில் சில விடயங்களை ஜம்மியத்துல் உலமா சபை தொடர்பில் போட்டு வாங்கியுள்ளதன் விளைவே இந்த குர் ஆன் பிரதி வேண்டியதன் சூட்சுமமாக இருக்கலாம் என்ற சிலரின் அரசால் புரசலான கருத்துக்களிலும் உண்மை இருப்பதை மறுக்க முடியவில்லை .அதற்கான காரணம் களத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட சில கோல் மால்களை புரிவது இஸ்லாமிய இயக்கங்களின் ,அமைப்புகளின் பெசனாகவே போய்விட்டது !

                            சூடு பறக்கும் குப்ரியத்தின் இஸ்லாமிய ,முஸ்லீம் எதிர்ப்பு அரசியலுக்கு முன்னால் சுரணை கெட்ட முஸ்லீம் சூனிய மண்டலங்கள் மோதிக்கொள்வதன் விளைவு என்ன என்பதை உலகத்தை பார்த்தாவது சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ளா விட்டால் இலங்கை வாழ் முஸ்லீம்களின் எதிர்காலம் !!!!????காலத்தின் தேவை கருத்து வேறுபாடுகளை தாண்டிய சகோதரத்துவமே .

No comments:

Post a Comment