சத்திய சாயம் கலந்த சாக்கடை !
இது யூதர் வழி நின்று தூதர் மொழி பேசும்
எம்மவரின் ஓர் நவீன வெளியீடு ?!
இதுதான் இஸ்லாமிய அரசியல் என்றால் ;
அல்லாஹ்வின் தூதருக்கு (ஸல் )
அபுஜஹல் அல்லவா அடைக்கலம்
கொடுத்திருப்பான் !!!!!
அபுலஹபின் மணைவி விறகு
சுமந்து வந்து அவருக்கு
விருந்தல்லவா சமைத்திருப்பாள் !!!!!
மக்காவில் இஸ்லாமிய தேசியம்
புரட்சிகரமாய் எழுந்திருக்கும் !!!!!
அகிலத்தின் அருட்கொடை
ஒரு மன்னராய் முடிசூட்டி
சிலவேளை மதீனாவை எதிர்த்திருப்பார் !!!!!
ஒரு குருந்தேசமாய் தேசியம் பேசி
ரோமருக்கு வரி கட்டி சமரசமாகி !!!!!
இஸ்லாத்தை சிலுவையில் தொங்கும்
தஸ்பீ மணி போல ஆக்கியிருப்பார் !!!!!
Wednesday, April 2, 2014
இஸ்லாமிக் 'திமோகிரசி'!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment