Friday, December 27, 2013

இன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது?(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)


ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி  அவனுள்  உட் புகுந்த காரணத்தினால் தனது இயல்பு நிலை மறந்து ,ஜாஹிலீயத்துக்கு ஜால்ரா அடிக்கும் ஜாதியாகி விட்டான் . இஸ்லாத்தை அடகு வைத்தாவது இருப்பைப் பாதுகாப்போம் என்பதே காலத்தின் தேவையாக காட்டப்படுகிறது . நானும் இந்த சராசரி கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் நிலையில் சரியான திசையில் பயணிக்க இத்தகு பதிவுகள் உதவலாம் இன்ஷா அல்லாஹ் .

                      இவண் 
                    மனித அடிமை விலங்கை அகற்றத் துடிக்கும் 
                    அபூ ருக்சான் 


          வாழ்வினை நெறிப்படுத்தும் சட்டதிட்டங்களும், பாதுகாப்பும், ஆட்சியமைப்பும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட எந்த ஒரு நிலப்பகுதியும் இன்று   இவ்வுலகில் இல்லை. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் 99சதவீதமும், இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் சட்டதிட்டங்கள் 1 சதவீதமும் இருந்தாலும் அது தாருல் குஃப்ர் என்பதே ஆகும். எனவே முஸ்லிம்கள் அதிகமான அளவு வாழும் வளைகுடா பகுதியிலும் சட்டதிட்டங்களாவன இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் முறையிலும் அமைக்கப்பட்டிருப்பதனால் அப்பகுதிகள் தாருல்-குஃப்ர் ஆகும்.

அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் தத்தம் நாடுகளில் என்ன செய்ய வேண்டும்?

     இஸ்லாம் நடைமுறையிலில்லாத இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் தமது நாட்டை தாருல் இஸ்லாமாக மாற்றுவதே அப்படி மாற்றுவதற்கான ஒரே வழி இஸ்லாமிய ஆட்சியான கிலாஃபா அரசு ஒன்றை உலகில் நிருபுவதன் மூலம் ஒரு சக்தி வாய்ந்த இராஜ தந்திர கேடயத்தை நிலைநாட்டுவதே ஆகும். கிலாஃபா ஆட்சியின் பிரதிநிதியான கலீஃபாவால் மட்டுமே தஆவாவின் மூலமும் ஜிஹாதின் மூலமும் அனைத்து நாடுகளையும் தாருல் இஸ்லாமாக மாற்ற முடியும்.

தாருல்-இஸ்லாம் என்பது என்ன? 

        வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலப்பகுதியே தாருல் இஸ்லாம் எனப்படும். அப்பகுதியின் சட்டதிட்டங்கள், பாதுகாப்பு அனைத்தும் இஸ்லாமிய முறைப்படியே அமையும். மேலும் முஸ்லிம் அல்லாதோர் அதிகம் வாழ்ந்தாலும், சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய முறைப்படி அமைவதால் அது தாருல் இஸ்லாம் ஆகும்.

தாருல்-குஃப்ர் என்பது என்ன?

     அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே முஸ்லிம்களாக இருந்தாலும் அங்கு நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களும் பாதுகாப்பும் இஸ்லாமிய முறைப்படி அமையப்பெறாவிடில் அது தாருல் குஃப்ர் ஆகும். ஏனெனில் ஒரு நிலப்பகுதியை தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனப் பிரித்தரிய அங்கு நடைமுறைப்படுத்தப்படும் சட்டதிட்டங்களே முக்கியக்காரணியாகும். அங்கு வாழும் மக்கள் பின்பற்றும் மதத்தினைக் கொண்டு தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனக் கூறுதல் இயலாது.

கிலாஃபத் என்றால் என்ன? 

       கிலாஃபத் என்பதாவது உலகளாவிய முறையில் முஸ்லிம்கள் அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும் .அது அல்லாஹு (சுபு) அருளிய சட்டதிட்டங்களின் படி ஆட்சிபுரிவதாகும். 

கிலாஃபத் என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கின்ற வெவ்வேறு வார்த்தைகளாம்.

இஸ்லாமிய சர்வதேச உறவுகள்….!

        இஸ்லாமிய உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒரே பிரதேசமாகவே கருதப்படும். ஏனெனில் முஸ்லிம்கள் அனைவரும் தனித்துவம் கொண்ட ஒரே உம்மத் என்பதாலாகும். அவர்கள் அனைவரும் ஒரே அரசாக, ஒரே மக்களாக, அணியாக ஒரே அணியாக வாழவேண்டியது வாஜிபாகும்.

ஆகவே, இந்நாடுகளுக்குள் இருக்கும் உறவு அந்நிய நாட்டு உறவாகவோ வெளிவிவகார கொள்கையின் வட்டத்திற்குள்ளோ இருக்கமாட்டாது.

இஸ்லாமிய அரசு இந்த நாடுகளுடன் ஒருபோதும் அந்நிய நாடுகளுடன் வைத்துள்ள இராஜதந்நதிர உறவுகளையோ எவ்வித உடன்படிக்கை களையோ மேற்கொள்ளாது. 

   இந்த நாடுகள் அனைத்தும் கிலாபத் அரசின் பகுதியாக காணப்படும். இவர்கள் வாழும் பிரதேசம் தாருள் இஸ்லாமாக இருக்கும் பட்சத்தில் கிலாபத் அரசின் குடிமக்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பிரதேசம் தாருள் குப்ராயின் தாருள் குப்ரில் வாழும் முஸ்லிம்களாக கருதப்படுவார்கள்.

       மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகள் தாருள் ஹர்பாக காணப்படும். இந்நாடுகளுடன் முஸ்லிம்களது நலனையும் கிலாபத்தின் நலனையும் அடிப்படையாக கொண்டுள்ள வெளிநாட்டு உறவுகள் இருக்கும். இறை சட்டத்தின் அடிப்டையில் இந்நாடுகளது வெளிநாட்டு உறவுகள் தீர்மானிக்கப்படும்.

     இந்நாடுகளுடன் குறித்த தவணையில் நட்புமுறையில் (வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், அறிவியல்) ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படமுடியும். இவ் ஒப்பந்தங்களின் போது முஸ்லிம்களதும் கிலாபத் அரசினதும் நலன்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாவவே அமையும்.

       முஸ்லிம்களுடன் போர்க்குணத்துடன் நடந்துகொள்ளும் காலனித்துவ நாடுகளுடன் முன்னெச்செரிக்கையாக கிலாபா அரசு நடந்து கொள்வதுடன் இராஜ உறவுகள் வைத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்நாட்டு இராஜ தூதரகங்கள் கிலாபத்தினது முஸ்லிம் தேசத்திற்குள் இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இந்நாட்டு மக்கள் வீசா மற்றும் கடவுச் சீட்டுடன் மட்டுமே இஸ்லாமிய நிலப்பரப்பில் அனுமதிக்கப்படுவார்கள்.

     முஸ்லிம்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் நாடுகள் கிலாபத்தின் போர்ப்பிரகடன நாடுகளாக கருதப்பட்டு எதிரி நாடுகளுடனான இராஜ உறவுகள் மேற்கொள்ளப்படும்.

மேற்குறித் அடிப்படையிலான வெளிநாட்டு உறவுகள் இன்று உலகில் எந்த ஒரு முஸ்லிம் நாடுகளிலும் இல்லை. 

       அதேவேளை இத்தகைய நிபந்தனைகள் சுமார் 1300 வருடகாலமாக இஸ்லாமிய கிலாபா அரசு இருந்த வேளையில் கடைப்பிடிக்கப்பட்டு முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.

   இன்று கிலாபா அரசு இல்லாதபடியில் முஸ்லிம் நாடுகள் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளது சுடுகாடுகளாக மாறி முஸ்லிம்களது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டு முஸ்லிம் உம்மத் இந்த அந்நிய சக்திகளால் சூரையாடப்படுகிறது.

       ஆகவே, இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள இஸ்லாமிய தலைமைத்துவத்தை எமது முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மேற்குலகின் பிடியில், சதிவலையில், சூழ்ச்சியில், சுரண்டலில் இருந்து பாதுகாப்போம். நபிவழியில் மீண்டும் கிலாபாவை ஏற்படுத்த அயராது உழைப்போம். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
                                                            (அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

  முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். (அந்நிஸா:141)



விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.(ஆல இம்ரான்: 28)

சவூதி அரேபியா மாயையும் உண்மையும் !

       ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின் அங்கு “இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில்” நிறுவப்பட்ட மனிதனுடைய அரசியல், பொருளில், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகளுடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு வழங்கப்படும் நிலையில் ஆட்சி நிகழ வேண்டும். 

அதன் ஆட்சியாளர் என்பவர் ஆட்சி புரிதல், ஆட்சி அதிகாரத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் மற்றும் அஹ்காமுஸ் ஷரீஆவை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் உம்மாவின் சார்பில் அதன் பிரதிநிதியாக செயலாற்றுவார். 

இன்று எம்மில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியாவை முஸ்லிம்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும் நாடு எனும் தோரணையில் நோக்கும் மனப்பாங்கை கொண்டிருப்பதனை நாம் காணலாம். ஆனால் யதார்த்தத்தில் அங்கு நடைபெறுவது “குப்ருடை ஆட்சி” என்பதற்கு பின்வரும் காரணங்களை நாம் முன்வைக்க முடியும்.

1. இங்கு மனிதச் சட்டங்களை கொண்ட முறையும் பகுதியான ஷரீஆ சட்டங்களும் அமுல்படுத்தப்படுகிறது. (சவுதி அல்லாத பெண்களை திருமண முடித்தல் தொடர்பான சட்டங்கள், வரிகள் தொடர்பான சட்டங்கள், வர்த்தகம் தொடர்பான சட்டங்கள்)

2. சவூதி அரசினது பொருளியல் ஒழுங்கில் வட்டியின் தாக்கம் பெருமளவில் காணப்படுகிறது. 

-AMF இல் பெரிய பங்குதாரர், 3.2% வட்டியை பெறுகிறது.

-IMF இல் ஆறாவது மிகப்பெரிய பங்குதாரர். இவ்வட்டி நிறுவனத்தின் மூலமே முழு உலகினது பொருளியல் ஒழுங்கும் வட்டியடிப்படையில் நிறுவப்படுகிறது.

3. இது குப்பார்களது அணியான UN இல் நிரந்தர உருப்புரிமையை பெற்று அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிமகளையும் கறுவருப்பதில் முழுமையான ஒத்துளைப்பை வழங்குகிறது. 

4. UNESCO நிறுவப்படுவதில் மிகப்பெரிய அக்கறை எடுத்த நாடு. இதனை நிறுவுவதற்கு 4.6 மில்லியன் டொலரை கடனாக கொடுத்த நாடு. இவ்வமைப்பு நிறுவப்பட்டிருப்பதன் நோக்கம் “மேற்கத்தேய சிந்தனைகளை விதைப்பதுடன்” “இஸ்லாத்தை இல்லாதொழிப்பது” என்பதாகும்.

5. தேசிய எல்லைக்குள் முஸ்லிம்களை கட்டியாள்வதற்கென்றே நிறுவப்பட்ட Arab League ஐ ஸ்தாபிப்பதில் முன்னணி நாடு. இதன்மூலம் “தேசியவாம்” கட்டிக்காக்கப்படுகிறது.

No comments:

Post a Comment