Wednesday, July 31, 2013

'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் ! பகுதி 2


               அதிகார ஆணவம் ,மண்ணாகிப்போன நேற்றைய தாகூத்கள் வரைந்த மக்கிப்போன யாப்புகள் , சட்டங்கள் ! கச்சைக் கலாச்சாரத்தை கண்ணியமாக கருதும் ஒரு வாழ்வுச் சூழல், இதை கட்டிக் காத்து ஆண்டார்கள் எகிப்தில் (மட்டுமல்ல உலகெங்கும் ) நவீன தகூத்கள்.  அங்கு  காட்சிப் பிணமாக இருக்கும் பிர் அவ்ன் சிலவேளை உயிரோடிருந்தால் !? அவனின் வாரிசுகளை எகிப்திய அதிகார மேடையில் பார்த்து மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப் பட்டிருப்பான் !

Tuesday, July 30, 2013

'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் !

                               'தாக்கூத்' என்றால் வரம்புமீறிய சைத்தான் என்ற சொற்பதம் விளக்கமாக சொல்லப்பட்டாலும்  சற்று அழமாக இஸ்லாமிய மொழி மரபில் இப்பதம் மிகவும் பாரதூரமான ஒரு விடயத்தை காட்டி நிற்கின்றது . அதாவது தான்தோன்றித் தனமாகவும் பகிரங்கமாகவும் , தனது செயல்களுக்கான நியாயப் போலிகளுடனும் ,காரண காரிய விதிகளுக்கு உற்பட்ட தனது பலத்தை பிரயோகித்தும் இறைவனின் பண்புகள் சிலதோ பலதோ தனக்கு இருப்பதாக சொல்லால் அல்லது செயலால் காட்டி  இறைவனோடும் , அவன் அருளிய வழிமுறை ,மற்றும் அதை பின்பற்றும் மனிதர்களுக்கு எதிராக சவால் விடும், சதி செய்யும்  எந்த ஒன்றையும் இந்த 'தாக்கூத்' எனும் பதம் உள்ளடக்கி விடும் .


Sunday, July 28, 2013

சிரியாவில் இருந்து ஒரு மடல் ...


என் இஸ்லாமிய சகோதரனுக்கு !
                                                        அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ....

         "மேலும் ,நிராகரிப்பாளர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாவர். இதை (முஸ்லீம்களாகிய )நீங்கள் செய்யாது விட்டால் பூமியில் பெரும் குழப்பமும் ,கலகமும் ஏற்பட்டு விடும் .                  (அல் குர் ஆன் சூரா அல் அன்பால் : வசனம் 73)
       
                                     இது சத்திய இஸ்லாமிய கிலாபத்தின் மீள் உதயத்தை இலக்காக்கி உலகெங்கும் அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவின் உதிரம் பேசும் இலட்சிய வார்த்தைகள் .

Friday, July 26, 2013

'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு !


   ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த ஆதிக்க தயவில் வாழ்வது சாத்தியமற்றது அப்படி வாழ்வதாக இருந்தாலும் அது தனது இயல்பான உயிரோட்டத்தை இழந்தே இருக்கும் . இஸ்லாம் ஒரு தனித்துவமான சித்தாந்தம் என்றால் குப்ரிய மேலாதிக்கத்தின் கீழ் அதன் இயல்பான வடிவத்தில் நடைமுறை காண முடியாது . 


       ஆதிக்கத்தில் இருக்கும் குப்ரிய சித்தாந்தம் இஸ்லாம் தனது நடைமுறை ஆதிக்கத்தை இழக்கும் வகையில் கடுமையான விட்டுக் கொடுப்புகளையும் ,மாற்றங்களையும் ,சிதைவுகளையும் இஸ்லாத்தின் மீது எதிர்பார்க்கும் ,அத்தோடு நிர்ப்பந்திக்கும் அதனூடாக அதன் சித்தாந்த மற்றும் வாழ்வியலின் மேலாதிக்கத்தை ஒருபக்கம் பேணிக் கொள்வதோடு ஒரு தக்கன பிழைத்தல் தொடர்பான அச்சத்தையும் இஸ்லாத்தின் மீது ஏற்படுத்தி விடும் .

Thursday, July 25, 2013

நாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...


இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வின்  மீது 
அநீதப்  பூட்டுப் போட்டு அதன் சொந்த முற்றங்களில் 
அவலங்களால் நிரப்பி ஆனந்தப் படும் 
அல்லாஹ்வின் எதிரிகளே !?

அயோக்கியத்தை நியாயமாக்கி  நீ 
அடிவருடித்தனத்தை சுயநல இலாப பிச்சை காட்டி 
எமக்குள் விதைத்தாய் ! அந்த கோடரிக் காம்புகள் 
தேசிய விலங்கிட்டு சகோதரத்துவத்தை 
ஒருபக்கம் கேள்விக்குறி ஆக்கின !

இது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .


.............." எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின்  உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் "     (சூரா அல் பகரா வசனம் 249)

                      ரமழான் வந்தவுடன் விசேடமாக அல்பத்ர் சமர்க்களம் அனேகமாக எல்லா முஸ்லீம்களாலும் நினைவு கூறப்படும் .இந்த சமரைப் பற்றி பேசப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் "அதில் ஒரு களப் போராளியாய் நானும் இருந்திருக்கக் கூடாதா என்ன  கைசேதமே" என அதில் கலந்து கொள்ளாத ஒவ்வொரு முஸ்லிமும்  கவலைப்படும் அளவுக்கு அந்தப் போரின் இஸ்லாமிய தரப்பு பங்காளிகளுக்கு அல்லாஹ் (சுப ) ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் ; அது சுவனம் நிச்சயிக்கப் பட்ட நன்மாராயமே ஆகும் .  

Wednesday, July 24, 2013

எது ஆன்மீக வறுமை !?



        இன்று முஸ்லீம் உம்மாவுக்கு ஏற்பட்டுள்ளது ஆன்மீக வறுமையே என்ற கருத்து சிலரால் அழுத்தமாக முன்வைக்கப் படுகின்றது . மேலும் அஹ்லாக்கின்மையும் ஒழுக்க வீழ்ச்சியும் தான் முஸ்லீம் உம்மாஹ் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கான காரணமாகும் என சர்வ சாதாரணமாக பேசப்பட்டு வந்தாலும் இந்தப் பார்வையில் ஒரு தெளிவின்மை தெரிவதை யாரும் மறுக்க முடியாது .

Sunday, July 21, 2013

அமெரிக்கா தனது அதிகாரத்தை எகிப்தில் ஆழப்படுத்துகிறதா?


மெரிக்க வெளிவிவகார துணைச் செயலர் வில்லியம் பேர்ன்ஸ் எகிப்தின் இராணுவ ஆதரவைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் தலைவர்களுடன் இரண்டு நாட்கள் பேச்சுக்களை நடத்த கெய்ரோ வந்தார்இதற்கிடையே அமெரிக்க கடற்படையானது செங் கடல் கடலோர பகுதிகளுக்கு கப்பல்களையும் மரைன்களையும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ரமழான் முதல் 10 ...?


மனிதம் தொலைத்து நீதியை மிதித்து 
ஆதிக்கம் புரியுதே அநியாயம் ! - அது 
ஒற்றுமை சிதைத்து தப்பெண்ணம் விதைத்து 
நான் என வளரும் அகம்பாவம் !

Friday, July 19, 2013

சொன்னாலும் வெட்கமடா ! சொல்லா விட்டால் குற்றமடா ! (இது உலகம் போற போக்கு !)


"Judges should be lions. but yet lions under the throne" (Francis Bacon) இந்த வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்கும் .அதாவது "நீதிபதிகள் சிங்கங்களைப் போல இருக்க வேண்டும் ஆனாலும் அந்த சிங்கங்கள் மன்னனின் சிம்மாசனத்திற்கு கீழ்ப்பட்டே செயல்பட வேண்டும் !"இந்த வார்த்தைகளே போதும் 'ஜாஹிலீயத்தின் ' சர்வதேசம் இன்று எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள !

Thursday, July 18, 2013

இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள் .


"இன்று முஸ்லீம்களின் நிலை இப்படி இருக்கிறது ; சுலபமாக இருக்கின்ற இஸ்லாமியச் சட்டங்களை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள் . ஆனால் இஸ்லாத்திற்கும் குப்ருக்குமிடையில் அடிப்படையான மோதல் ஏற்படும் கட்டத்தில் தமது முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் . தாம் இஸ்லாத்தில் தாம் பூரணமாக இருக்கிறோம் என கூறிக்கொள்ளும் பெரிய ,பெரிய ஆசாமிகளிடமும் இந்தப் பலவீனம் இருக்கிறது .

Friday, July 12, 2013

அந்த நாள் முதல் இந்த நாள் வரை ......


    நான் கீழ்தரும் சம்பவம் 1965ல்  எகிப்தில் நிகழ்ந்தது . சோவியத் யூனியனதும் , அமெரிக்க ஏகாதி பத்தியத்தினதும் விசுவாசம் மிக்க கங்காணிகளாக தொழில்பட்ட ஜமால் அப்துல் நாசரின் அநீதமான அடக்குமுறை ஆட்சியின் கீழ் அல் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினர் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட காலப்பகுதி . அந்த இயக்கத்தின் அதி முக்கிய உறுப்பினரான செய்யத் குத்ப் (ரஹ் ) இரண்டாம் முறை கைது செய்யப் படுகிறார்.


Thursday, July 11, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா ...! (பகுதி 04)

கிங்க்ஸ் ஸ்டைல் பொலிடிக்ஸ் முஸ்லீம் நிலங்களில் 
இஸ்லாத்தை எதோ 'ஊறுகாய்' போல் தேவைக்கு ஏற்ப 
அவ்வப்போது தொட்டுக்கொள்ளும் ! அந்த 'கிங் டோமை '
'கூல்' ஆக்கும்'முதவாக்களின் பத்துவாக்கள்' சிலுவை 
நிழலில் மன்னன் சொல்லும் நியாயங்கள் முன் 
மௌனித்து வஹியை கௌரவமாக எளனிக்கும்!

Wednesday, July 10, 2013

முகமூடி யுத்தம் எனும் இராணுவ பாசை ..! குப்ரிய அரசியல் தம் அழிவை தடுக்க தேர்ந்துள்ள இறுதி மொழியா !?


      சந்தர்ப்பங்களை மிகச் சரியாக பயன்படுத்துவதில் இருந்து தான் குப்பார்களின் அரசியல் ஆதிக்க சதிகள் முஸ்லீம் உலகில் நிகழ்த்தப் படுகின்றன .ஆனால் இவர்களின் திட்டமிடல் என்பது ஒரு சவாலே தவிர விதியல்ல . முஸ்லீம் உலகில் இஸ்லாமிய அரசியல் வந்து விடக் கூடாது எனும் அச்சம் தவிர இதற்கான பலமான காரணம் வேறு இருக்க முடியாது .

Monday, July 8, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 03)


செக்கியுலரிச அகராதியில் மார்க்கம் மதமாகி !
மஸ்ஜித் கதவுகளால் சற்று எட்டிப் பார்க்க 
'எக்ஸ்பயார்ட் ' ஆக்கப்பட்ட சத்தியத்தின் பூமி 
சண்டாளர்களால் சதிக்கோல வாழ்வியலால் 
பிரித்தாளப் பட்டிருந்தது ! இந்த அவமானத்தை 
அரவணைத்த உம்மத்தின் புத்திரர்கள் 
அறியாமைச் சடத்துவத்தில் புதுச் சுவை கண்டார்கள் !
இன்றுவரை தொடருது இந்த இழிவான அரசியல் !
அது தாகூதிய தாண்டவம் ! 
சகோதரா !அதில் நீயும் ஓர்  கூத்தாடியா !?

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 02)


தாருள் இஸ்லாத்தை குப்ரால் குளிப்பாட்டி 
தேசிய விலங்கிட்டு மனித அடிமைதுவத்துக்கு 
முஸ்லிமை மறுபிரவேசம் புரிய வைத்தது 
அந்த 1924 ம் ஆண்டுதான் ! - வில்லங்கம் அன்று 
தாத்தாரியர் பாக்தாதுக்குள் நுழைந்தது போல் 
வாளேந்தி வரவில்லை ! அது இந்த முஸ்லீம் 
உம்மத்தின் உதிரத்தில் உதித்த ஒரு அடாவடி 
மகனால் தான் நிகழ்ந்தது 'ஜாஹிலீய ' மயக்கத்தில் 
மதிகெட்டு அந்த மாபாதன் முஸ்தபா கமால் அதாதூர்க் 
மிதித்தான் இஸ்லாத்தின் அரசியலை என்பது உண்மை .

Sunday, July 7, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.!


          நீயும் இந்த முஸ்லீம் உம்மத்தின் ஓர் அங்கம் 
உனது காயங்களுக்காக எனது கண்களும் என்னை 
அறியாமலே கண்ணீர் சிந்துகின்றன !உனது ஏமாற்றத்தில் 
நானும் அதிர்ந்து போகிறேன் .இருந்தும் இன்று நடந்தது 
கொடிய எதிரியோடு யுத்தத்தில் கண்ட விழுப்புண் அல்ல !
அவன் பொறியில் தேடிப்போய் மாட்டிய மகா தவறு !

Friday, July 5, 2013

ஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகிறார்கள் !?


   எகிப்தின் இடைக்கால அரசிற்கு  சவூதி மன்னர் அப்துல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நிகழ்வுகளும் அங்கீகாரமும் திட்டமிட்டபடி நடந்துள்ளன . செக்கியுலரிசம்  வேசஸ் இஸ்லாம் என மக்கள் இரண்டு முகாம்களாக்கப் பட்டு மோத விடப்பட்ட நிலையில் மீண்டும் இராணுவம் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு இந்த ஆட்சி மாற்ற நாடகத்தை பக்குவமாக அரங்கேற்றியுள்ளது . இந்த இடத்தில ஆட்சிக்கடிவாளம் யாரின் கையில் இருந்திருக்கின்றது என்ற இரகசியம் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது .

Thursday, July 4, 2013

'இகாமதுத் தீனுக்காய் ஸுன்னாவை' மிஞ்சிய 'ஹிக்மத்' ஒரு சிறப்புப் பார்வை .



                   எதிரியின் கையில் அழிவுக்கான ஆப்பைக் கொடுத்து விட்டு சந்தர்ப்பம் வந்தால் அடிக்கலாம் என்ற மனோபாவத்தையும்  அவனுள் வளர்த்து விட்டு ஆட்சித் தலைமையை பிடித்தல் ஊடாக படிமுறை மாற்றம் என்ற 'சிரிஞ்சில் ' இஸ்லாமிக் வக்சினை ' செலுத்தி சமூக மட்டத்தில் தேவைக்கு தகுந்தால் போல் 'டோஸ் ' போட்டு சத்தியத்தை சாத்தியமாக்கலாம் என்ற 'ஹிக்மத் ' இப்போது அதன் ஆபத்தான எதிர்விளைவை எகிப்தில் சந்தித்துள்ளது .

எகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்தியம் .... ஒரு பார்வை (2012 டிசம்பர் 20இல் பதிந்தது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


         ஒளியை  மிளிரச் செய்ய இருளிடமும் அனுமதி கேட்பதா ? 'ஹக்கை ' அமுல் படுத்த 'மெஜாரிட்டி 'பவரா ? அதுவும் இஸ்லாத்தை அமுல் படுத்த முஸ்லீமிடமே உத்தரவு வேண்டப் படுகின்றதா ? சற்று குழப்பமான  விடயம்தான் . வேலி போட பயிரின்  அனுமதி வேண்டுமாம் !!


 நியாயங்களை புதைத்து விட்டு ஒப்புக்காக காரணம் தேடுவது அயோக்கியத்  தனமானது . 'வஹியின் ' தேவைப்பாடு தொடர்பில் விகிதாசாரம் பார்ப்பது ஒரு முஸ்லிமை பொருத்தவரை மிகத் தவறானது . அல்லாஹ்வின் மார்க்கத்தை பலதோடு ஒன்றாக நிணைப்பதும் அறிவிற்கு பொருந்தாதது . நடப்பது இதுதான் (நவீன ஜாஹிலீயத் எனும் )ஜனநாயக விழுமியங்களின் கீழ் 'வஹி ' விளையாட்டுத் தனமாக ஏளம் விடப்பட்டுள்ளது .