Saturday, October 20, 2012

'தாகூத்' ஒரு பார்வை .


"ஒவ்வொரு சமூகத்திலும் அல்லாஹ்வையே வணங்குங்கள் ;தாகூத்திற்கு அடிபணிவதை விட்டும்  நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ;என்று (எச்சரிக்குமாறு ) நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் "   (TMQ அத்தியாயம் 16 : வசனம் 36)
    
                                                                                                                                 
               ' தாகூத் ' என்பது இறைவனை எதிர்த்து சவால் விட்டு சதி செய்பவனை குறிக்கும் ! அல்லாஹ்வை தவிர்த்து வேறு எவரை வழிபடப்படுகிறதோ அவரைக்  குறிக்கும் ! வழிபட்டு நடப்பவன் கட்டாயத்தின் காரணத்தினால் வழிபட்டாலும் சரியே ! அல்லது தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழிபட்டாலும் சரியே !அது 'தாகூத் ' ஆகும் .அது மனிதனாக இருக்கலாம் ,அல்லது ஒரு சைத்தானாக இருக்கலாம் ,அல்லது சிலை ,அல்லது  அல்லாஹ் அருளாத சிந்தனை, அல்லது அல்லாஹ் அருளாத  வழிமுறை ,அல்லது ஏதேனும் ஒரு பொருளாக இருக்கலாம் .
                                                             (இப்னு ஜரீர் அத்தபரி  ஜாமியுள் பயான் பீ தப்சீரில் குர் ஆன் பாகம் 3, பக்கம் 13)
தவறான இலக்குகளால் இறைவனின் விதிகளை மீறும் தவறின் மீதுதான் 'தாகூத் ' தோன்றுகிறான் !
ஒரு முஸ்லீம் தன் ஈமானியத்தை விலைபேசி அதனிடம்  சரணடைவதை விட அவன் கொல்லப்படுவது சுகமானது .
நாம் இப்ராஹீம் (அலை ) இடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது . அது அறிவுத் தேடலின் மீது அகீதாவையும் கட்டுபடுவதில் மட்டுமே சரீயாவையும் கண்டார் . மகனின் கழுத்தில் கத்தி வைக்க கட்டளை வந்தபோது அவர் தன் புத்தியை தீட்டவில்லை ! அந்த குர்பானியத் தீர்வின் நினைவு 
கூர்தலே இன்றைய' உல்ஹியா ' .அது அந்த 'அய்யாமுத் தஸ் ரீகின் ' மூன்று நாட்களே . அதில் ஒரு நாளை நீ' தாகூத் 'திற்கு தியாகம் செய்து அந்த நாளையே 'குப்ரிட்கு' குர்பான் கொடுக்கும் தவறின் 
மீது அழைக்கப் படுகின்றாய் !! நரகத்தின் முகவரியில் இந்த அழைப்பு 'மிம்பர்' களில் இருந்தும் வழங்கப் படுகின்றது .

No comments:

Post a Comment